ஆத்தூர் அருகே, ரயில்வே மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

106
Advertisement

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராசிபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக தாண்டவராயபுரம் செல்லும் சாலையில் 20 அடி ஆழத்தில் ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நிலைதடுமாறி 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம்  இடத்துக்கு சென்ற போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த இளைஞர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த லோகேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது.