தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

208

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு, சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக, அவர்கள் வீடுகளில் மத்திய குற்றபுலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்த அதிகாரிகள், இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்ற நிலையில், ஆசிப் முசாப்தீன் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிப் முசாப்தீன் மீது தேசிய தீவிரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், மற்றொரு இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக ஈரோட்டில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.