நெல்லையில் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவமனை; மொரிசியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் திறந்து வைப்பு…!

235
Advertisement

நெல்லையில் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த கண் மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் சிங் ரூபன் திறந்து வைத்தார்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள அகர்வால் கண் மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் ரூபன் இன்று திறந்து வைத்தார். இந்தியாவில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் கண் பார்வையற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவைகளை அகற்றுவதே எங்களின் நோக்கம் என அகர்வால் மருத்துவமனையின் தலைவர் அமர் அகர்வால் தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது கண் நரம்பியல் நோய்களால் மனித உடலில் ரத்த நாளங்களில் இருந்து எடுக்கப்படும் பசை மூலம் லென்ஸ் மருத்துவத்துறையில் முன்னேறிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது என்றும், அதே தொழில்நுட்பத்தை தான் அகர்வால் கண் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவமனையை மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர் பிரித்திவிராஜ் சிங் ரூபன் திறந்து வைத்தார். 65,000 சதுர அடி கட்டிட பரப்பளவோடு இம்மருத்துவமனை 20 கண் மருத்துவர்களோடு செயல்பட உள்ளது. மொத்தம் 138 மருத்துவமனைகளைக் கொண்ட அகர்வால் கண் மருத்துவமனை குழுமத்தில் 114 மருத்துவமனைகள் இந்தியாவில் உள்ளன. மற்றவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றன.