காஞ்சிபுரம் அருகே வேன் ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31
Advertisement

காஞ்சிபுரம் பாவா பேட்டை தெருவை சேர்ந்த அயூப் கான் என்பவர் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், அயுப்கான் ரங்கசாமி குளம் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே மதுபோதையில் வந்த இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த அயுப்கானிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதில் அயுப்கானுக்கும் இரு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இரு இளைஞர்களும் சேர்ந்து அயுப்கானை கல்லால் அடித்து விட்டு சென்றனர்.

படுகாயம் அடைந்த அயூப் கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரதீப் குமார்,  வினோத்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.