கர்நாடகாவில் முதன்முறையாக வாக்களிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், உணவக உரிமையாளர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்…

103
Advertisement

கர்நாடகாவில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் முறையாக வாக்களிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், உணவக உரிமையாளர் ஒருவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள நிர்பதுங்கா சாலையில் உணவகம் நடத்தி வரும் அவர், முதல் முறை வாக்காளர்கள் வாக்களித்த பின் கைவிரலில் வைக்கப்பட்ட மையை காண்பித்தால் பட்டர் கல் தோசை, மைசூர் பாக் மற்றும் ஜூஸ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல் முறை வாக்காளர்களுக்கு 100 இலவச சினிமா டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என அந்த உணவக உரிமையாளர் அறிவித்துள்ளார்.