Saturday, July 19, 2025

அன்றைய லிட்டில் ஸ்டார்…ஆவாரா சூப்பர்ஸ்டார்?

‘I am  a little star’ ஆவேனே சூப்பர்ஸ்டார் என பாடிய அந்த சிறுவனின் வேகமும், துடிப்பும், ஆர்வமும் நாற்பதாவது வயதிலும் சற்றும் குறைந்த பாடில்லை.

நான்கு வயதில் ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவின் கதவை தட்டிய சிம்பு, பதினெட்டாவது வயதில் ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் தனக்கான ஹீரோ என்ட்ரியை உறுதி செய்து கொண்டார்.

‘தம்’, ‘குத்து’ போன்ற படங்களில் காதல் தூவிய action ஹீரோவாக வலம் வந்த சிம்பு, ‘கோவில்’, ‘மன்மதன்’ படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனம் ஈர்க்க தொடங்கினார்.

‘வல்லவன்’ படத்தை அவரே இயக்கி சினிமாவின் அடுத்த பரிமாணத்திலும் தடம் பதித்தார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ கார்த்தியாக பல பெண்களின் இதயங்களை கொள்ளை கொண்ட சிம்பு, ‘வானம்’ படத்தில் கேபிள் ராஜாவாக பல கண்களையும் அழ வைத்து விட்டார் என்றே சொல்லலாம்.

அடுத்தடுத்த படங்களில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறிப்போன சிம்பு, செக்க சிவந்த வானத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தினால் திரும்பி பார்க்க வைத்த சிம்புவிற்கு, டைம் ட்ராவல் கதைக்களம் கொண்ட ‘மாநாடு’ புது ரசிகர்களை பெற்று தந்தது.

‘வெந்து தணிந்த காடு’ மூலம் மூன்றாவது முறையாக கௌதம் மேனனனுடன் வெற்றிக் கூட்டணி அமைத்த சிம்பு, ‘வாரிசு’ படத்திற்காக பாடிய ‘தீ தளபதி’ பாடலும் ஹிட் அடித்த நிலையில், அடுத்த படமான ‘பத்து தல’ படம் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news