87 ரூபாய்க்கு ஒரு வீடு!

379
Advertisement

சென்னை நகரின் மத்தியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள
ஒரு வீட்டின் விலை தோராயமாக 50 லட்சம் விலை இருக்கும்.
வெறும் 87 ரூபாய் விலைக்கு ஒரு வீடு கிடைத்தால் எப்படியிருக்கும்.?

மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள்தானே…

ஆனால், இந்த அதிரடி சலுகை வீடு இத்தாலியில் விற்கப்படுகிறது.

அங்குள்ள சலேமி என்னும் பகுதியில்தான் இந்த ONE EURO சலுகை
விலை வீடுகள் விற்பனை செய்யப்படுவதாக அந்நாட்டு அரசால்
அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இக்கிராமத்தில் தொழில் தொடங்குவோருக்கு 10 லட்சம்
யூரோவை வரி மற்றும் பங்களிப்பு நிவாரணமாக வழங்குகிறது.

இந்தப் பகுதி இத்தாலி நாட்டின் தென்மேற்குப் குதியில் சிசிலி நகரம்
அமைந்துள்ளது. இந்த நகரத்தின் ஒரு பகுதிதான் சலேமி. பள்ளத்தாக்கின்
மையப்பகுதியில் 446 மீட்டர் உயரத்தில் திராட்சை தோட்டம்,
ஆலிவ் தோட்டம் சூழ இப்பகுதி அமைந்துள்ளது.

அழகான கிராமப்புறமான இந்தப் பகுதி வரலாற்றுச் சிறப்பு கொண்டது.
1968 ஆம் ஆண்டு அங்குள்ள பெலிஸ் பள்ளத்தாக்கில் பூகம்பம் ஏற்பட்டது.
பூகம்பத்துக்குப் பிறகு சலேமி பகுதி மக்கள் தொகை குறைந்துவிட்டது.
மீண்டும் மக்கள் அதிக எண்ணிக்கையில் இந்தப் பகுதியில் குடியேற வேண்டும்
என்பதற்காக அரசாங்கமே இந்த அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

பழங்கால அரண்மனைகள், தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் நிறைந்த
இந்தப் பகுதியை சுற்றுலா நகரமாக உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.

என்றாலும், அந்த வீடுகளை வாங்க அங்குள்ளவர்கள் யாரும் முன்வரவில்லை
என்பதுதான் ஆச்சரியமான விசயம். 400 வீடுகள் விற்பனைக்குத் தயாராக
இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு குறைந்த விலைக்கு தர முன்வந்தும் மக்கள் அங்கு குடியேற
விரும்பாதது மற்ற நாட்டு மக்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

நம்ம நாட்லயும் இப்படி ஒரு சலுகை கிடைச்சா எப்படி இருக்கும்….