குடவாசல் அருகே, மர்ம நபர்கள் தீ வைத்ததில், ஒரு கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமாகின…

96
Advertisement

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி வள்ளுவன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன்.

இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 5 மாதம் கர்ப்பிணியான செந்தமிழ்செல்வனின் மனைவி கீர்த்திகா தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டுமுன் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில், அந்த வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. கீர்த்திகா அளித்த புகாரின்பேரில். சம்பவ இடத்துக்கு வந்த குடவாசல் போலீசார், தடயவியல் துறையினர் உதவியுடன் விசாரணை நடத்தினர்.