ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம்போன காளை

275
Advertisement

காளை மாடு ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி விவசாயிகளை மட்டுமன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 2021 ஆம் ஆண்டு விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் விவசாயம் தொடர்பான எந்திரங்கள், கருவிகள், தொழில்நுட்பங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன. அத்துடன் மாடுகளின் விற்பனையும் ஏலமுறையில் நடைபெற்றது.

இதில் மூன்றரை வயதுள்ள கிருஷ்ணா என்னும் காளை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தக் காளைதான் கண்காட்சியின் நாயகனாக வலம்வந்தது. காரணம் இது பொலி காளை என்பதுதான்.

அனைத்துக் கால்நடை இனங்களுக்கும் தாயாகக் கருதப்படும் ஹல்லிகர் இனத்தைச் சேர்ந்தது இந்தப் பொலி காளை.

வலிமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் இந்த வகைக் காளைகள் புகழ்பெற்றவை. அதனால் ஹல்லிகர் இனப் பொலி காளையின் விந்துவுக்கு கடும் கிராக்கி உள்ளது.

இந்தப் பொலிகாளையின் உரிமையாளர் கிருஷ்ணா. இதன் ஒரு டோஸ் விந்தணு 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தப் பொலி காளை வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.