திடீர் மாடலிங் ஆன 60 வயது கூலித் தொழிலாளி

238
Advertisement

60 வயதில் கூலித் தொழிலாளி ஒருவர் மாடலிங் ஆகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதாகும் இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

மக்கிப்போன லுங்கி, கசங்கிய சட்டையுடன் எப்போதும் காட்சியளிக்கும் மம்மிக்காவுக்குத் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட்டுப் பிரபலமாகியுள்ளார்.

இவரது திறமையைக் கண்டுபிடித்தவர் உள்ளூர் போட்டோகிராபரான ஷரீக் வயலில். மம்மிக்காவின் மாடலிங் புகைப்படத்தைத் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டார் ஷரீக். அதைப் பார்த்த பலர்,கேரள நடிகர் விநாயகர்போல் உள்ளதாக கருதினர்.

அதனால், மாடலிங் செய்யும் வாய்ப்பு மம்மிக்காவைத் தேடிவந்தது. மாடலிங் மூலம் பிரபலமடைந்துள்ள அவர், தற்போது கோழிக்கோட்டில் உள்ள வெண்ணக்காடு, கொடிவள்ளி பகுதியில் ஹீரோவாக வலம் வருகிறார்

தனது பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றைத் தொடங்கி, அதில் வழக்கமான தனது உடையுணிந்துள்ள போட்டோக்களையும், மாடலிங் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு அசத்தி வருகிறார்.

மாடலிங் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் மம்மிக்கா, தனது வழக்கமான வேலையுடன் வாய்ப்பு கிடைக்கும்போது மாடலிங்கும் செய்வேன் என்கிறார் பழையதை மறவாத மாமனிதர்.

https://www.instagram.com/p/CZrbiLIBp4O/?utm_source=ig_web_copy_link