2000 வருட மம்மி வயிற்றில் சிதையாமல் இருக்கும் கரு

290
Advertisement

2 ஆயிரம் வருடப் பழமையான மம்மியின் வயிற்றிலுள்ள கரு விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக, எகிப்தில் 2 ஆயிரம் வருடம் பழமையான மம்மியின் வயிற்றில் கரு ஒன்று சிதையாமல் இருப்பதைக்கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

30 வயதில் இறந்துபோன பெண்ணின் மம்மியாக இது இருக்கலாமென்றும், அந்தப் பெண் கிமு முதலாம் ஆண்டில் இறந்திருக்கலாமென்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

போலந்து அறிவியல் அகடமியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் வார்சா பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் சேர்ந்து இந்த மம்மியைக் கண்டுபிடித்துள்ளனர்.

வரலாற்றுக்கு முந்தைய பெற்றோரின் வயிற்றில் பாதுகாக்கப்பட்ட கருவைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் செயலும், மம்மியைப் பற்றி புதிரும் அனைவரையும் வியக்க வைத்து வருகிறது..