காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூரில் இன்று நீர் திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்..
தமிழ்நாட்டில் கடுமையான வெயில் நிலவி வந்தாலும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதியுடன் வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால் இன்று வரை வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை.
90 ஆண்டுகளுக்கு முன் 1934ல் முதல்முறை இப்படி திறக்கப்பட்டது. அதன்படியே இப்போது சரியாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஜூன் மாதம் 12-ந் தேதி இதுவரை 18 முறை மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இந்த முறை 19வது தடவையாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.