CPS திட்டத்தை மேற்கு வங்காள அரசு இன்றுவரை அமல்படுத்தவில்லை. சிபிஎஸ் திட்டம் அமல்படுத்தப்பட்ட ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிபிஎஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தேர்தல் வாக்குறுதிப்படி கர்நாடகாவில் ஏழாவது மாநிலமாக விரைவில் CPS திட்டம் ரத்து செய்யப்பட உள்ளது. இந்நிலையில், திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண்: 309இன் படி CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், CPS திட்டத்தில் இறந்த / ஓய்வு பெற்ற / ஓய்வுபெறும் அரசு ஊழியர் / ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்கக் கோரியும், 27.6.23 செவ்வாய் அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
CPS திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இந்த சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம். எனவே, CPS திட்டம் ரத்து செய்யப்பட்டால் CPS ஒழிப்பு இயக்கம் கலைக்கப்படும். இவ்வியக்கம் எந்த சங்கத்துடன் இணைந்தது இல்லை.
தமிழ்நாட்டில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் வரை போராட்டங்கள் தொடரும் என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தில் அங்கமாக உள்ள தமிழக அரசு ஊழியர்கள்.