இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அவர், “மே 12 வெளியாகும் ஃபர்ஹானா படத்தின் சிறப்புக் காட்சி படக்குழுவினருக்கு இன்று திரையிடப்பட்டது.
தியேட்டர் வாசலில் ஐஸ்வர்யா ராஜேஷிடம் படத்தில் எனது வசனங்களுக்கும் அவரது நடிப்புக்கும் இடையே நடந்த பெரும்போட்டியைப் பற்றி கூறினேன். மிகவும் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
ஃபர்ஹானா இஸ்லாமிய கலாச்சாரப் பின்புலத்தை மிக மிக கண்ணியமாக காட்டும் படம் என்பதை வெள்ளிக்கிழமை எல்லோரும் உணர்ந்துகொள்வார்கள். கேரளா ஸ்டோரீஸ் போன்ற மோசமான நோக்கம் உடைய படத்தோடு ஃபர்ஹானாவை இணைத்து பேசுவது தவறான புரிதலின் அடிப்படையில் எழுந்த ஒரு விபத்து.
இதை எங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.
நம்முடைய தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சொர்க்க பூமி. கலைப் படைப்புகளை மிகவும் மதிக்கும் மண். தணிக்கை செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தை புரிதல் குழப்பத்தினால் அதன் வெளியீட்டுக்கு முன்பே எதிர்ப்பதும், சர்ச்சைகளுக்கு ஆளாக்குவதும் முறையானதல்ல.