டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர்

116
Advertisement

லிபியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். 76 பேர் படுகாயமடைந்தனர். வட ஆப்பிரிக்கா நாடான லிபியாவின் பென்ட் பய்யாவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை , அப்பகுதியில் இருந்த மக்கள் போட்டி போட்டு கொண்டு சேகரித்தனர். எச்சரிக்கையையும் மீறி மக்கள் பெட்ரோலை சேகரித்த நிலையில், எதிர்பாராதவிதமாக லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 76 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 76 பேரில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.