குழந்தைகளிடம் பெற்றோர் பேசக்கூடாத 7 விஷயங்கள்

315
Advertisement

ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும்
கற்றுக்கொடுக்கவும் எண்ணற்ற விஷயங்கள்
உள்ளன. நாம் குழந்தைகளிடம் என்ன விஷயம்
பேசுகிறோமோ அநத விஷயங்கள் அவர்களின்
மனதில் ஆழமாகப் பதிந்து கடுந்தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, குழந்தைகளிடம் பேசக்கூடாத 7
நெகடிவ் விசயங்களைப் பார்ப்போம்.

 1. எந்தச் சூழ்நிலையிலும் ”நீ கெட்ட பையன்” அல்லது
  ”நீ கெட்ட பெண்” என்று பேசக்கூடாது. குழந்தைகள்
  எதையும் முழுமையாக நம்பும் மனநிலை கொண்டவர்கள்.
  அவர்கள் தவறே செய்தாலும், அவர்களைக் குற்றவாளியாக
  நினைக்கச் செய்யும் வார்த்தைகளைச் சொல்லக்கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம் நல்ல பையனாச்சே… இப்படி நடந்துக்கலாமா…? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்'' என்று பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரிய வையுங்கள்.
 2. ”நீ உன் சகோதரன் மாதிரி இல்லை” என்றோ, ”உன் சகோதரி
  மாதிரி இல்லை”யென்றோ ஒப்பிட வேண்டாம். உலகில் ஒவ்வொரு
  வருக்கும் ஒரு திறமை இருக்கும். சகோதர, சகோதரிகளுடனோ
  அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் குழந்தைகளுடனோ ஒப்பிடும்போது
  அவர்கள்மீது வெறுப்பும் கோபமும் ஏற்படும். வாழ்வில் பெரியதாகத்
  தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள்.
 3. எதற்கெடுத்தாலும் நோ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக்
  கேட்கும்போது சட்டென்று இல்லை, முடியாது போன்ற வார்த்தை
  களைப் பயன்படுத்தாதீர். இந்த வார்த்தைகள் பெற்றோர்மீதான
  நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில்
  உங்களுக்கு உடன்பாடில்லை என்றால், அப்புறம் பார்க்கலாம்,
  இது தேவையற்றது என்று விளக்குங்கள்.
 4. ”என்னோடு பேசாதே” என்பது போன்ற வார்த்தைகளைப் பேச
  வேண்டாம். அரவணைத்தல்மூலமே பெற்றோர் குழந்தைகள்
  பிணைப்பு ஏற்படுகிறது. அதனால், என்னோடு பேசாதே என்பது
  போன்ற முகத்தில் அடிக்கும் வார்த்தைகளைப் பேசாதீர். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள். அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் வார்த்தை, முக பாவனைகளால் உணர்த்துங்கள். பெற்றோரை முழுமையாகப் புரிந்துகொள்ளும்வரைக் குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதைக் கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாகப் பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து ''உன் வார்த்தைகளால் அப்செட் ஆகிவிட்டேன்'' என்று சொல்லுங்கள். இதன்மூலம் உங்களுடன் எப்படிப் பேசுவது என்பதைப் புரிந்துகொள்வார்கள்.</code></pre></li>'பையன்கள் இதைச் செய்யக்கூடாது, பெண்கள் அதைச்
  செய்யக்கூடாது' என்று சொல்லாதீர். பாலினப் பாகுபாடின்றிக்
  குழந்தைகள் வளர்வது சமூகப் பிரச்சினைகளைக் குறைக்கும்
  வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக்
  கூடாது. இரு பாலினக் குழந்தைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். இது பெண்களுக்கான வேலை, இது பையன்களுக் கான வேலை என்று பிரிக்கக்கூடாது. வீட்டுவேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள். ''அப்பா வரட்டும்… உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்ட சொல்லிடறேன்''
  போன்ற வார்த்தைகள் கூடாது. அம்மாக்கள் அடிக்கடி இப்படிச்
  சொல்வார்கள். இப்படிச் சொன்னால் அம்மாமீதும், ஆசிரியர்மீதும்
  வெறுப்புணர்வுதான் ஏற்படும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும்
  சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர். குழந்தைகள் தவறு
  செய்தால் அவர்களே அப்பாவிடம் சொல்லித் திருத்திக்கொள்ள
  அனுமதியுங்கள். ''உன்னை மாதிரி பிள்ளையை யாருமே வச்சுக்க மாட்டாங்க.
  உன்னை மாதிரி பிள்ளைகளை யாருக்குமே பிடிக்காது'' என்பது
  போன்ற வார்த்தைகளை எந்தச் சூழலிலும் பேசாதீர். குழந்தைகள்
  வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால் ''கத்தாதே…
  வெளியே போ…''என்று நாமும் பதிலுக்குக் கத்திப்பேசாமல் மெதுவாகப்
  பேசுங்கள் அல்லது வெளியே சென்று விளையாடுங்கள் என்று கூறலாம்.

இன்றைய குழந்தைகள்தான் வருங்காலத் தலைவர்களாக உருவாகின்றனர்.
அவர்களை சரியான முறையில் வளர்ப்பதும் உருவாக்குவதும் பெற்றோர்
கையில்தான் உள்ளது- பெற்றோரின் அறிவும், திறமையும், அனுபவமும்
அவர்களின் குழந்தைகள் சிறந்தவர்களாக வளர்வதற்குப் பெரிதும் உதவும்.