டொனால்ட் ட்ரம்ப் மீது 7 வழக்கு பதிவு!

145
Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகையில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றது, சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறை முடக்கியது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிபர் பதவியில் தோல்வியுற்ற பின்னர் வெள்ளை மாளிகையை காலி செய்த டொனால்ட் ட்ரம்ப் முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்கச் சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறாக ஒப்படைக்காமல் ‘கிளாஸிஃபைட் டாக்குமென்ட்ஸ்’ என்றழைக்கப்படும் மிக முக்கியமானவற்றை ட்ரம்ப் எடுத்துச் சென்றது என்பதே குற்றச்சாட்டு.