Saturday, June 14, 2025

மூளையின் செயல்திறனைப் பாதிக்கும் 7 செயல்கள்

நமது உடம்பில் மூளைதான் அதிகளவு ஆக்ஸிஜனைக்
கிரகித்துக்கொள்கிறது. அசுத்தக் காற்றை சுவாசிப்பதன்
மூலம் மூளைக்குள் ஆக்ஸிஜன் செல்வது தடைப்படுகிறது.
மூளையின் செயல்திறனும் குறைகிறது.

உடல் ஆரோக்கியமாக இயங்கினாலும் மூளை
இயங்காமல் இறப்பவர்களைப் பற்றி நாம்
கேள்விப்பட்டிருப்போம்.

எனவே, மூளையைப் பாதிக்கும் நமது பழக்கவழக்கங்கள்
சிலவற்றை அறிந்து அவற்றைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்வோம்.

  1. காலை உணவு உண்ணாதிருத்தல்.
  2. இரவில் தாமதமாக உறங்குதல்.
  3. அதிக அளவில் சர்க்கரை அல்லது சர்க்கரைப் பண்டங்களை உண்ணுதல்.
  4. அதிக நேரம் உறங்குதல், குறிப்பாக, காலை நேரத்தில் அதிக நேரம் துயில் கொள்ளல்.
  5. தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டரைப் பார்த்துக்கொண்டே உண்ணல்.
  6. ஸ்கார்ப் மற்றும் ஷாக்ஸ் அணிந்தபடியே உறங்குதல்,
  7. சிறுநீரை அடக்குதல்

இந்த 7 காரணிகளும் மூளையின் செயல்திறனைப்
பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த 7 விசயங்களையும் கவனத்தில்கொண்டு செயல்படுவோம்.
மூளையைப் பாதுகாப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

செலவில்லாத இந்த விஷயங்களைக் கடைப்பிடிப்பதும் சுலபம்தானே..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news