செல்போன் பேசிக்கொண்ட தண்டவாளத்தைக் கடக்க முயன்ற
பெண்மீது சரக்கு ரயில் கடந்துசென்ற வீடியோ இணையத்தில்
வைரலாகியுள்ளது.
தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் வருவதைக் கவனிக்காமல்
செல்போனில் பேசிக்கொண்டே செல்பவர்களில் சிலர் அதில் அடிபட்டு
இறக்கின்ற துயர சம்பவங்கள் அரிதாக நடந்துவருகின்றன. ஆனால்,
அண்மையில் இப்படி நடைபெற்ற ஒரு சம்பவத்தில் இளம்பெண்
உயிருடன் தப்பியுள்ளார்.
மயிர்க்கூச்செறியச்செய்யும் இந்த சம்பவம் வட இந்தியாவில்
நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது.
ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் சரக்கு ரயில்
ஒன்று அதிவேகமாகச் செல்கிறது. ரயில் முழுவேகத்தில் கடந்து
சென்ற பிறகு, தண்டவாளத்தில் படுத்திருந்த ஓர் இளம்பெண்
எதுவும் நிகழாததுபோல மெதுவாக எழுந்து தண்டவாளத்தைக்
கடந்துசெல்கிறார்.
குர்தா, தாவணி அணிந்திருந்த அப்பெண் அப்போதும் செல்போனைக்
கையில் எடுத்துப் பேசியபடியே எதுவும் நடக்காததுபோல் தண்டவாளத்தைக்
கடந்துசென்றதுதான் வியப்பின் உச்சம்.
நெட்டிசன்களைத் திகைக்க வைத்துள்ள இந்த வீடியோ தற்போது
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.