கல்லாக மாறிய 5 மாதக் குழந்தை

307
Advertisement

https://www.instagram.com/tv/CQnwqnTIUlV/?utm_source=ig_web_copy_link

தங்கள் கண்முன்னே தாங்கள் பெற்றெடுத்த அழகுக் குழந்தைக்
கல்லாக மாறிவருவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் பெற்றோர்.

இங்கிலாந்தில் அரிய வகை மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள
5 மாதக் குழந்தை கல்லாக மாறிவருவது மருத்துவத் துறையே மிரளவைத்துள்ளது.

இங்கிலாந்தின் HERTFORDSHIRE நகரைச் சேர்ந்தவர்கள் அலெக்ஸ்- டேவ்
தம்பதியினர். இவர்களுக்கு 2021, ஜனவரி 31 ஆம் தேதி ஓர் அழகான பெண் குழந்தை
பிறந்தது.

குழந்தைக்கு லெக்ஸி ராபின்ஸ் என்று பெயரிட்ட பெற்றோர், குழந்தையின்
கைவிரல்கள் அசைவு எதுவும் இன்றி இருப்பதைக் கவனித்தனர். உடனே
மருத்துவர்களிடம் காண்பித்தனர்.

குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் FOP என்னும் (FIBRODYS PLASIA
OSSIFICANS PROGRESSIA) அரிய வகை மரபணு நோயால் குழந்தை
பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர்.

20 லட்சம் பேர்களுள் ஒருவரைத் தாக்கும் இந்த FOP நோய் மனித உடலின்
தோலை சிறிதுசிறிதாகக் கல்லாக மாற்றும் எனவும், இத்தகைய நோய்
பாதித்தோரின் ஆயுள் 40 ஆண்டுகள் வரைதான் நீடிக்கும் என்றும், 20 வயது
முதல் படுத்த படுக்கையாக இருப்பர் என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நோயைக் குணமாக்கும் மருந்து எதுவும் இன்றுவரைக் கண்டுபிடிக்கவில்லை
என்றும், இத்தகைய குழந்தைக்குத் தடுப்பூசிகூட செலுத்த முடியாதென்றும் கூறி
அதிரவைத்துள்ளனர்.

ஒருவேளை 20 வயதில் இப்பெண்ணுக்குத் திருமணம் நடந்தாலும் குழந்தை
பெற்றுக்கொள்ளும் தன்மை இல்லையென்று கூறி திகிலூட்டுகின்றனர் மருத்துவர்கள்.

இதனால் மிகுந்த வேதனையில் உள்ள இக்குழந்தையின் பெற்றோரான
அலெக்ஸ்- டேவ் இருவரும், ”எங்கள் மகள் மிகுந்த புத்திசாலி. இரவில்
நன்றாகத் தூங்குகிறாள். பகலில் நன்றாக சிரிக்கிறாள். எப்போதாவதுதான்
அழுகிறாள்” என்று சோகம் கலந்த மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

தற்போது தங்கள் மகளின் மருத்துவ சிகிச்சைக்கும், இந்த நோய் பற்றிய
தொடர் ஆராய்ச்சிக்கும் நிதி திரட்டி வருகின்றனர்.

இதுபற்றிய விவரங்களைத் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள
இந்தத் தம்பதி, ”உங்கள் குழந்தைக்கும் இத்தகைய பாதிப்பு எதுவும் உள்ளதா
என்று பரிசோதித்து விழிப்போடு இருங்கள்” என்று வேண்டியுள்ளது.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர். இந்தத் தெய்வக் குழந்தைக்கு
எதுவும் ஆகாது, ஆகக்கூடாது என இறைவனை நாமும் பிரார்த்திப்போம்.