எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 4800 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

29

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 4 ஆயிரத்து 800 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி 4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணை முடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.