கீவ் நகரில் 36 மணி நேர முழு ஊரடங்கு அமல்… தாக்குதலை தீவிரப்படுத்துகிறதா ரஷ்யா ?

219
Advertisement

உக்ரைனில் மேற்கு பகுதிகளில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், கீவ் நகரில் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது வான்வழியாக தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்ய படைகள் குடியிருப்புகள் மீதும் சரமாரியாக குண்டுகளை வீசியதாக தீவிரமாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இதனால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. குண்டுவீச்சில் பொதுமக்களும் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் நோக்கில் கீவ் நகரில் வரும் 17 ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மேயர் விடாலி கிளிட்ஸ்கோ அறிவித்துள்ளார். பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பான இடத்திற்கு புலம் பெயர்பவர்கள் மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement