3,500 கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டாரில் இருந்து நீக்கம்… இதுதான் காரணமா…?

93
Advertisement

இந்தியாவில், விதிகளை மீறிய 3ஆயிரத்து500 தனிநபர் கடன் செயலிகளை play ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

கூகுள் play ஸ்டோரின் தனியுரிமை கொள்கைகளில் அண்மையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுதல், தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் கடன் வழங்கும் செயலிகளுக்கு கூகுள் விதி முறைகளை கடுமையாக்கியுள்ளது.  நாடு முழுவதும் ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் ஈடுபட்ட 14 பேரை மும்பை சைபர் கிரைம் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இதனையடுத்து, தனி நபர் கடன் செயலிகளை நீக்கி கூகுள் இந்தியா நிர்வாகம் அதிரடி  நடவடிக்கை எடுத்துள்ளது.