3,000 ஆண்டு பழமையான தங்க முகமூடி

455
Advertisement

மூவாயிரம் ஆண்டு பழமையான தங்க முகமூடி
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்
சான்ஜிங்டுய் பகுதியில் உள்ள கட்டட இடிபாடுகளில்
இந்தத் தங்க முகமூடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 கிராம் எடையுள்ள இந்த தங்க முகமூடி
37.2 செ.மீ அகலமும், 16,5 செ,மீ உயரமும் கொண்டுள்ளது.

கி,மு 1046 ஆம் ஆண்டில் முடிவுக்குவந்த ஷாங் வம்சத்தைச்
சேர்ந்ததாக இந்தத் தங்க முகமூடி கருதப்படுகிறது.

அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்தப் பகுதியில் ஆய்வுகளை
மேற்கொண்டபோது 1000க்கும் அதிகமான பழங்காலப் பொருட்கள்
கிடைத்துள்ளன. அவற்றில் பல வெண்கலச் சிலைகள்,
வெண்கல முகமூடி, வெண்கலப் பாத்திரம் உள்பட
ஏராளமான கலைப்பொருட்களும் கிடைத்துள்ளன.
பழங்கால சீனர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல்
போன்றவற்றை இந்தக் கலைப்பொருட்கள் நிரூபிப்பதாக
அமைந்துள்ளன. எனினும், தங்க முகமூடி எதற்காகத் தயாரிக்கப்பட்டது
என்கிற விவரம் வெளியாகவில்லை.