திண்டிவனம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

225

திண்டிவனம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். இவருக்கு திண்டிவனம் அடுத்துள்ள ராஜம்பாளையம் கிராமத்தில் வாழை தோப்பு உள்ளது. காட்டு பன்றிகள் சேதப்படுத்தாமல் வாழை தோப்பை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார். இந்த வாழை தோப்பிற்கு வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் காவலாளியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் வெங்கடேசனை பார்ப்பதற்காக வன்னிப்போர் கிராமத்தை சேர்ந்த முருகதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய மூவரும் வாழை தோப்பிற்கு சென்றுள்ளனர். அப்போது, வாழை தோப்பை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.