கோலிவுட்டில் இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.
முன்னணி ஹீரோக்களின் படங்கள் அதிகமாக இந்த ஆண்டு வெளியானது. விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டுமில்லாமல் சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படங்கள் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளான நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூல்மழை பொழிந்தது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் ஜெயலர், சிவகார்த்திகேயனின் மாவீரன், அயலான், விஜய்யின் லியோ என அடுத்தடுத்து படங்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படங்களும் கோலிவுட்டில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லியோ, ஜெய்லர் படங்கள் அதிகமாக வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக லியோ படம் ரிலீசுக்கு முன்னதாகவே அதிகமான வசூலை எட்டியுள்ளது
இதனிடையே கடந்த மாதம் 28ம் தேதி ரிலீசான பொன்னியின் செல்வன் 2 படமும் மிகச்சிறப்பான வசூலை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிகமான வசூலை எட்டியுள்ள படம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தப் படம் இதுவரை சர்வதேச அளவில் 350 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் படங்கள் அதிக வசூலை எட்டிய படங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. விஜய்யின் வாரிசு படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டு இதுவரை வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.