Thursday, April 17, 2025

இலங்கை பொருளாதார நெருக்கடி: வீடு திரும்பும் மீனவர்கள்

தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த மார்ச் 24ஆம் தேதி தமிழக மீனவர்கள் 12பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் மீனவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest news