2000 வருடப் பழமையான ஃபாஸ்ட் ஃபுட் ஓட்டல்

324
Advertisement

2 ஆயிரம் வருடப் பழைமையான ஃபாஸ்ட் ஃபுட் ஓட்டல்
ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்டைய ரோமானிய நகரமான பாம்பீ என்ற இடத்தின்
மையப்பகுதியில் இந்த உணவகம் அமைந்திருந்தது. இதற்கு
தெர்மோபோலியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு,
சூடாக உணவு விற்பனை செய்யப்படும் இடம் என்று அர்த்தமாகும்.

இதுபோன்று 80க்கும் அதிகமான ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள்
இந்நகரில் இருந்துள்ளது 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற
அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் இந்த உணவகத்தின்
வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். வீட்டைவிட்டு
வெளியிடங்களுக்குச் சென்றபோது இங்கு உணவு உண்பதை
வாடிக்கையாகக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த உணவகத்தின் மெனு கார்டில் ஒரு கோழிப் படமும்
ஒரு தலைகீழான வாத்துப் படமும் உள்ளது. எலும்புகள், மீன்,
ஆடு, பன்றி போன்றவற்றின் இறைச்சிகள் இந்த துரித உணவுகள்
பரிமாறப்பட்டுள்ளதற்கான அடையாளங்கள் இங்கு உள்ளன.

சூடான உணவு வகைகளும் விதம்விதமான குளிர்பானங்களும் இங்கு
விற்கப்பட்டுள்ளன. பெரிய மண்பாண்டங்களில் வைக்கப்பட்டு இவை
பரிமாறப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வகை உணவுக்கும் தனித்தனியான பளிங்குக் கற்களாலான
தளம் இருந்துள்ளது- வண்ணமயமான ஓவியங்கள் இங்கு பரிமாறப்படும்
உணவு வகைகளைக் குறிப்பிடுகின்றன.

பேலா என்ற ஒருவகை ஸ்பானிஷ் பிரியாணி இங்கு சமைக்கப்பட்டுள்ளதைத்
தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட இரண்டு மனித
உடல்களும் இந்த உணவகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

எரிமலை வெடித்ததால் இந்த உணவகம் அமைந்திருந்த பாம்பீ நகரம்
அழிவுக்குள்ளாகியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஃபாஸ்ட் ஃபுட்
உணவகம் சென்ற ஆண்டு சில நாட்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது-