ஆசிய கோப்பையில் சாதனை செய்த வீரர்கள்

361
Advertisement

ஆசியக் கோப்பைக்கான 14 ஆம் எடிஷன் ஆகஸ்ட் 28 தேதி தொடங்கிய நிலையில், இத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய பல ஆசிய ஜாம்பவான் வீரர்களிருக்கிறார்கள்,  இது தொடர்பான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம், ஆசியக் கோப்பை முதலில் 1984 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விளையாடப்பட்டது , ஒருநாள் மற்றும் டி -20 என இரண்டு வடிவங்களிலும் நடத்தப்படுகிறது. 

அதிகப்படியான ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில், தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஐந்தாம் இடத்தில் இருக்கிறர், 27 போட்டிகள் விளையாடி மொத்தமாக 883 ரன்களை அடித்துள்ளார், அதிகபட்சமாக 111 ரன்களை அடித்துள்ளார் ரோஹித். 7 முறை 50 ரங்களும் மற்றும் 1 முறை சதம் அடித்து சாதித்துள்ளார். 

அடுத்த படியாக நான்காம் இடத்தில் சோயப் மாலிக் இருக்கிறார், மொத்தமாக 21 போட்டிகள் விளையாடி, 907 ரன்களை அடித்துள்ளார், அதிகபட்சமாக 143 ரன்களை அடித்திருக்கிறார் மாலிக், இதில் 4 முறை 50 ரன்களும் மற்றும் 3 முறை சதம் அடித்துள்ளார்.

மூன்றாம் இடத்தில் கிரிக்கெட் கடவுள் சச்சின் இருக்கிறார், சர்வதேச கிரிக்கெட்டில் பல ரன்களை அடித்த  இவர், ஆசிய கோப்பையிலும் ரன்கள் அடிக்க தவறவில்லை, மொத்தமாக 23 போட்டிகளில் விளையாடி 971 ரன்களை அடித்துள்ளார், அதிகபட்சமாக 114 ரன்களை அடித்த இவர், இரண்டு சதங்களை அடித்துள்ளார். 

அடுத்த படியாக சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில், ஒருவரான குமார் சங்கர்காரா, 2ஆம்  இடத்தில் உள்ளார், 24 போட்டிகளில் விளையாடி 1075 ரன்களை அடித்துள்ளார், அதிகப்பட்சமாக 121 ரன்களை அடித்துள்ளார் சங்கர்காரா, மொத்தமாக 4 சதங்களை அடித்துள்ளார். 

முதலிடத்தில் மற்றொரு இலங்கை ஜாம்பவானான சனத் ஜெய சூர்யா இடம்பிடித்துள்ளார், 25 போட்டிகள் மட்டுமே  விளையாடி 1220 ரன்களை அடித்துள்ளார், இதில் ஆறு சதங்களை அடித்துள்ளார் அதிகபட்சமாக 130 ரன்களை அடித்துள்ளார்.   இந்த பட்டியலில் 6 ஆம் இடத்தில் கோலியும் மற்றும் 9 ஆம் இதில் தோனி அவர்கள் என்று நான்கு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.