ரயிலை நிறுத்திய பூரி

511
Advertisement

பூரி வாங்குவதற்காக ரயிலை நிறுத்திய டிரைவரின் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விநோதமான நிகழ்வு இராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

அந்த மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், பயணிகள் ரயிலை நிறுத்துகிறார் டிரைவர். உடனே கேட் கீப்பர் ஓடிவந்து டிரைவரிடம் ஒரு பார்சலைத் தருகிறார். அதன்பின் ரயில் புறப்படுகிறது.

டிரைவரின் இந்த செயலுக்கு பொதுமக்களிடமிருந்து கடும் கண்டனங்கள் கிளம்பின. அதேசமயம் இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகியது. உயரதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது. அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின் முடிவில், ஆல்வார் பகுதியில் ரயில்வே கேட் அருகே உள்ள உணவகத்தில் சுவையான பூரி, மசாலா கிடைப்பதும், தினமும் காலை 8 மணிக்கு ரயிலை நிறுத்தி, எஞ்ஜின் டிரைவர் அதை வாங்குவதும் தெரியவந்தது.

தற்போது ரயில் டிரைவர்கள், கேட்கீப்பர்கள் உள்பட 5 பேர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டூட்டி முக்கியமா? சோறு முக்கியமா என்று கேட்டால், சுவையான பூரிக்கிழங்குதான் முக்கியம் எனச் சொல்வார்களோ……

எதுக்கும்

வேலைக்கு இன்டர்வியூ வைக்கும்போதே கேட்டுடுங்கோ பாஸ்-..

டிரைவருக்கும் பசிக்குமுல்ல……