மாணவிகளின் புதுமையான பிரியா விடை

381
Advertisement

ஆசிரியைக்கு மாணவிகள் கொடுத்த புதுமையான பிரியா விடை இதயங்களை வருடிவருகிறது.

ஆசிரியர் சமூகத்துக்கும் மாணவச் செல்வங்களுக்கும் இடையேயான நட்பு உன்னதமானது. டீன் ஏஜ் வயதில் மாணவச்செல்வங்களுக்கு சிறந்த நண்பனாகவும் வழிகாட்டியாகவும் திகழ்வது ஆசிரியப் பெருமக்களே.

பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளத் தயங்கும் அல்லது கேட்டுத் தெரிந்துகொள்ளத் தயங்கும் விஷயங்களை ஆசிரியப் பெருமக்களிடம் பகிர்ந்தும் கேட்டும் தெரிந்துகொள்வார்கள்.
அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், வடக்குப் பர்கானாஸ் பகுதியிலுள்ள கடியாஹத் பிகேஏபி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய சாம்பா என்னும் ஆசிரியை சிறந்த தோழியாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு மாணவிகளின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

அந்தச் சூழ்நிலையில் ஆசிரியை சாம்பா, வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது பிரிவைத் தாங்கமுடியாத மாணவிகள் ஒன்றுகூடி தங்களின் அன்பை ஆசிரியையிடம் வெளிப்படுத்தினர். மாணவிகளின் அன்பு அனைவரின் உள்ளங்களையும் தொட்டுள்ளது.

அதிகார மிடுக்குடன் மாணவச்செல்வங்களிடம் பழகும் ஆசிரியர்கள் மத்தியில். நண்பனைப்போல் பழகும் ஆசிரியர்கள் மாணவச்செல்வங்களின் மனதில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.