பெண்ணின் காலை வெட்டிய திருடன்

240

வெள்ளி கொலுசுக்காக கொள்ளையர்கள், கொலுசுடன் சேர்த்து காலையும் வெட்டி சென்ற சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 100 வயதான மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் இருந்த வெள்ளி நகைகளை பறிக்க முயன்றனர்.

அப்போது மூதாட்டியின் கால்களில் இருந்த வெள்ளி கொலுசுகளை கொள்ளையர்களால் கழற்ற முடியாததால், விரக்தியடைந்த மர்மநபர்கள் வெள்ளி கொலுசுக்காக கொலுசுடன் சேர்த்து காலையும் வெட்டி சென்றனர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி துடித்து கொண்டிருந்ததை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வெள்ளி கொலுசுக்காக கொள்ளையர்கள், கொலுசுடன் சேர்த்து காலையும் வெட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.