நாட்டு வைத்தியரை கடத்தி ஒரு வருடம் சித்திரவதை

49
Advertisement

கேரளாவில், சிகிச்சை ரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக, நாட்டு வைத்தியரை கடத்தி சிறை வைத்து, துண்டுதுண்டாக வெட்டிக்கொலை செய்த தொழிலதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நபர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதில், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் கைப்பஞ்சேரியை சேர்ந்த ஷெபின் அஷ்ரப் என்பவர், மைசூர் நாட்டு வைத்தியர் ஷாபா செரீப்பின் மருத்துவ ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக அவரை கடத்தியுள்ளார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன் வைத்தியர் ஷாபா செரீபை மைசூருவிலிருந்து கடத்திய அவர், நிலம்பூரில் உள்ள தனது வீட்டில் வைத்தியரை அடைத்து வைத்துள்ளார். அவரை அடித்து கொடுமைப்படுத்தி மருத்துவ ரகசியங்களை கேட்டுள்ளனர். ஒரு வருடமாக கொடுமைப்படுத்தியும், வைத்தியர் ஷாபா செரீப் மருத்துவ ரகசியங்களை தெரிவிக்காததால், கடந்த 2020ஆம் ஆண்டு வைத்தியரை கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளனர்.

Advertisement

இதுதொடர்பாக தொழிலதிபர் ஷெபின்அஷ்ரப் மற்றும் அவரது கூட்டாளிகள் சிகாபுதீன், நவுஷாத், நிஷாத் ஆகியோரை கைது செய்துள்ளனர்