தமிழகத்தில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு!!! இன்னும் 5 மாவட்டங்களா?

169
Advertisement

தமிழ்நாடு மொழிவாரியாக 1956 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே பல மாற்றங்களை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

1956 ஆம் ஆண்டு  தமிழ்நாட்டில் வெறும் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. தென்னிந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி 38 மாவட்டங்கள் உள்ளன.  வை, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர்,  திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,  திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தருமபுரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம்,  திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகும்.

இந்த மாவட்டங்களிலும்  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த அதிமுக ஆட்சியின் போது தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில் தான் கூடுதலாக 5 மாவட்டங்கள் சேர்க்கப்படப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம்,  தமிழகத்தில் 43 மாவட்டங்களாக மாற உள்ளது.

அது என்னென்ன மாவட்டங்கள் என்றால்கோயம்புத்தூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டமாகவும்,  தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டமாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாறு மாவட்டமாகவும்,  கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டமாகவும், சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டமாகவும் பிரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்தான கூடுதல் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2024 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், சில நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படுவதாகவும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. எனவே, 2024 -ல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 43 ஆக உயரப்போகிறது. இதன்மூலம், அரசு அலுவலகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அரசு வேலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்போகிறது.