சொல்லுங்க ‘ஜெய் பஜ்ரங் பலி’… பாஜக இல்லாத தென்னிந்தியா சம்மட்டி அடி..!

262
Advertisement

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் கடந்த 10 ஆம் தேதி பொதுதேர்த்தல் நடந்தது.

இந்நிலையில், இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 11.55 மணி நிலவரப்படி காங்கிரஸ் 118 இடங்களிலும், பாஜக 75 இடங்களிலும், ஜேடிஎஸ் 24 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரசின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதால் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பாஜகவுக்கு இந்த தேர்தல் மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி கர்நாடகாவில் 33 பேரணிகளையும், 28 சாலை ஊர்வலமும் நடத்தினார். வழியெங்கிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பிரச்சாரத்தின்போது தீவிர இந்துத்துவா பிரதிநியாக பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தானை விமர்சித்தும், பஜ்ரங் பலி அமைப்பை ஆதரித்தும் பேசினார். அத்துடன் பாஜகவுக்கு வாக்களிக்கும்போது ‘ஜெய் பஜ்ரங் பலி’ என்று சொல்லிக்கொண்டே வாக்கு எந்திரத்தின் பட்டனை அழுத்த வேண்டும் என்று மோடி கோரிக்கை வைத்தார்.

வாக்கு எண்ணிக்கைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பேசியபோது, பணம் மற்றும் அதிகார பலத்தைக் கொண்டு ஆட்சியை திரும்ப கொண்டு வர பாஜக முயற்சித்தனர், அது தோல்வியில் முடிந்துவிட்டது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரின் பிரசாரம் வெற்றி பெற வைத்துள்ளது; கட்சியில் உள்ள அனைவரும் மிக தீவிரமாக தேர்தல் பணியாற்றினர். வருணா, சாமராஜநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக சோம்மனா தோல்வியடைவார். பிரதமர் மோடி வந்தாலும் எதுவும் நடக்காது என்று ஏற்கனவே கூறியிருந்தோம், அது நடந்துவிட்டது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை கிடைக்கும் என அவர் கூறினார்.