சைலண்ட் ஹார்ட் அட்டாக் வருவதற்கான ஆறிகுறிகள் 

244
Advertisement

ஹார்ட் அட்டாக் என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு விதமான பயம் வந்துவிடும், அதிலும் சைலண்ட் ஹார்ட் அட்டாக் குறித்து மக்களுக்கு அதிக விழிப்புணர்வு இல்லை,

வலி கூட ஏற்படுத்தாமல் சைலண்ட் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புகள் அதிகம், எந்த வகை ஹார்ட் அட்டாக்காக இருந்தாலும் இதயத்திற்குப் செல்லும் இரத்தத்தை தடுத்து நிறுத்தம், மேலும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், இதயதிற்கு உண்டான ஆக்சிஜன் தடைப்படுகிறது.

ஆனால் சைலண்ட் ஹார்ட் அட்டாகின் அறிகுறிகள் குறைவுதான், எனவே இந்த மாரடைப்பை உணர்த்தும் சில அறிகுறிகளை மருத்துவர்கள் கூறியுள்ளனர்,  

மெலிதான வலி மற்றும் மார்பில் அசெளகர்யம் ஏற்படும், அதுபோல மார்பை பிழிவதைப்போல உணர்வு , மார்பில் அழுத்தம் ஏற்படும், இவை நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறு ஆகியவைக்கும் ஒரே அறிகுறிகள் என்பதால் மக்கள் குழப்பம் அடைகின்றனர், முக்கியமான அறிகுறியாக குளிர்ந்த வியர்வை மற்றும் காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்பட்டு வேகமாக காணாமல் போய்விடும் ,

அடுத்து முதுகு, கைகள், கழுத்து, வயிறு பகுதிகளில் அசெளகரியம் கூடிய  வலி  ஏற்படும், எனவே இதுபோல உண்ர்வுகள் வந்தால் மருத்துவரை உடனடியாக அனுகவும்.