ஏலேய்.. 2023ல பாத்துக்கலாம்.. பழிக்கு பழி வாங்கிய மும்பை

402
Advertisement

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த சென்னை அணி, பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை அணி, விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் சென்னை அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 97 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணி சார்பில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து எளிய இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி, 14.5 ஓவரில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால், பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. ஏற்கெனவே மும்பை அணி பிளே-ஆப் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.