உங்க வீட்ல கரண்ட் பில் கட்டுறீங்களா? உங்களுக்கு தான் அவசர பதிவு!!!

198
Advertisement

தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது.

இதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் TANGEDCO , தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் TANTRANSCO என 2 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒவ்வொரு வீடாக சென்று மின் மீட்டர்களில் பதிவாகும் ரீடிங்குகளை கணக்கெடுக்கும் பணிகளை Tangedco மேற்கொண்டு வருகிறது.

 மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக புதிய குற்றச்சாட்டுகளும் எழுந்துவந்தன.கரண்ட் பில் சரியான தேதியில் கட்ட தவறினால் முதலில் அபராதமும், பிறகு fuse பிடுங்குவதும் நடக்கும். சமீப காலமாக fuse பிடுங்காது, நிலுவைத் தேதிக்கு பிறகான மின் நுகர்வை திருட்டு என வகைப்படுத்தி  கொள்ளையடிக்கிறது TANGEDCO என புது குற்றசாட்டு எழுந்துள்ளது.

அந்த குற்றச்சாட்டில் குமார் என்னும் நபருக்கு ஆகஸ்ட் மாத bill ரூ.90. அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அதை கட்டாமல் விடுகிறார். Fuse பிடுங்கப்படவில்லை. டிசம்பர் மாதம் எந்த பயன்பாடும் இல்லாவிட்டாலும் 990 என்று bill வருகிறது. நேரில் சென்று கட்ட போனால் தற்போதைய bill தொகை ரூ.11,800 என்று சொல்வதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இது மின்சார திருட்டு என்ற வகைப்படுத்தப்படுவதால் எந்த மேல் முறையீடும் அவருக்கு வழங்கப்படாது என்று சட்டம் சொல்கிறது.

சாமானியர்களுக்கு திருட்டு பட்டம் சூட்டி பல கோடிகளை இது வரை Tangedco திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

-ரிதி ரவி