Zomato, Swiggyயை ஓரங்கட்டும் ONDC! அப்படி என்ன ஸ்பெஷல்?

128
Advertisement

டிஜிட்டல் மயமாக மாறியுள்ள அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளவை E-Commerce தளங்கள்.

அதிலும், பொருட்கள் வாங்குவதை விட அவ்வப்போது உணவு ஆர்டர் செய்ய அதிகமான மக்கள் பயன்படுத்தும் முன்னணி food delivery appகளான Zomato மற்றும் Swiggyக்கு தலைவலியாக என்ட்ரி கொடுத்துள்ளது ONDC app.

அணைத்து வகையான வர்த்தக தரப்பினரையும் மக்களையும் ஒரே தளத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு உருவாக்கி இருப்பது தான் Open Network for Digital Commerce. இந்த தளத்தில் யார் வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். McDonald’s, Taco Bell, Behrouz Biryani, Wow Momo, Pizza Hut மற்றும் Cafe Coffee Day போன்ற பல பிரபல உணவு நிறுவனங்கள் இந்த தளத்தில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய களம் இறங்கியுள்ளது.

இந்த உணவு சேவை தற்போது பெங்களூருவில் தொடங்கி உள்ளது. Delivery கட்டணம் இல்லாத இந்த தளத்தை பயன்படுத்தி ஆர்டர் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், Zomato மற்றும் Swiggy போன்ற தளங்களை ஒப்பிடுகையில் 30இல் இருந்து 80 சதவீதம் வரை விலை குறைவாக கிடைக்க வாய்ப்பிருக்கும் இந்த தளம் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பின்னர், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் முக்கிய மாற்றங்கள் நடக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.