கர்நாடகாவில் வெல்லப்போவது யார் பாஜக-காங்கிரஸ் தீவிர வாக்கு வேட்டை..!

121
Advertisement

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தேர்தலுக்கு முந்தைய கருத்து முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஈசியாநெட் சுவர்ணா நியூஸ் சேனலின் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பீட்டில் யாரும் எதிர்பாராத வகையில் செம டிவிஸ்ட் உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

கர்நாடகா சட்டசபைக்கான 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 13 ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் வெளியாகின்றன.

ஏப்ரல் 13ம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்கி ஏப்ரல் 20ம் தேதி நடக்கும். ஏப்ரல் 21 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் நிலையில் மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு மே 10ம் தேதி நடைபெற உள்ள ஓட்டுப்பதிவு உள்ளது.