இனி Whatsappல உங்க குரலில் உங்க ஸ்டேட்டஸ்!

169
Advertisement

பயனர்களுக்கு சுவாரஸ்யமான அப்டேட்களை தொடர்ந்து அளித்து வரும் whatsapp, தற்போது மேலும் ஒரு அப்டேட் வழங்க முடிவு செய்துள்ளது.

பீட்டா (Beta) infoவில் வெளியான தகவலின்படி, இந்த அப்டேட் பொறுத்தவரை, whatsapp ஸ்டேட்டஸ் optionஇல் முப்பது நொடிகள் வரை, voice note போலவே ஸ்டேட்டஸ் வைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பீட்டா பயனர்களிடம் முன்னதாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தி பார்க்கப்படும் இந்த அப்டேட் விரைவில் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே, தங்கள் கருத்துக்களை தங்கள் குரலில் வெளிப்படுத்த விரும்பும் பயனர்களுக்கு இந்த அப்டேட் பயனாக அமையும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.