அதிமுக ஆட்சியில் 97 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்
எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

274
Advertisement

தங்கள் ஆட்சியின்போது 97 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியபோது,

அதிமுக ஆட்சியில் மொத்தம் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகள் 1,167. 491 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 97 சதவிகித அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

20 அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணை வெளியிடப்பட வேண்டும். நில எடுப்பு தாமதம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதாலும், மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டி இருப்பதாலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 26 அறிவிப்புகள் கைவிடப்பட்டன என்று தங்கள் ஆட்சியின் திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்.