பணமோசடி வழக்கு – VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

49

பணமோசடி வழக்கில் VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், செல்போன் நிறுவன இயக்குநர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவை சேர்ந்த VIVO செல்போன் நிறுவனம், இந்தியாவில் கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் விவோ நிறுவனத்தின் இயக்குநர்களாக ஹுஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

Advertisement

இந்நிலையில், விவோ நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் விவோ நிறுவனத்தின் இயக்குனர்களான ஹூஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ இருவரும் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 பேரும் சீனாவுக்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.