Apple WWDC 2023 நிகழ்ச்சியில் வெளியாகும் கருவிகள் என்ன..?

156
Advertisement

உலகளவில் Apple நிறுவனம் WWDC 2023 நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இது நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஆப்பிள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாம் எதிர்பார்க்கும் சில முக்கிய அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.


இந்த ஆப்பிள் நிகழ்ச்சியில் ரியாலிட்டி புரோ என்ற VR ஹெட்செட் கருவியை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருவி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய xrOS சார்ந்து இயங்கும். இதில் Hi-Res Micro OLED டிஸ்பிளே வசதி, 5000 நிட்ஸ் பிரைட்னஸ் அளவு, கூடுதலாக இடம்பெறும் தனிப்பட்ட பேட்டரி பேக் உள்ளது.

இதன் விலை 3 ஆயிரம் டாலர்கள் (2,47,500 லட்சம் ரூபாய்) விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அப்டேட் கிடைத்ததும் ஐபோன் மற்றும் ஜவாட்ச் ஆகியவற்றை சார்ஜ்ர் உடன் கனெக்ட் செய்ததும் ஆண்ட்ராய்டு போன்களை போன்ற அனிமேஷன் தெரியும். இதேபோல கூடுதலாக மனநலம், செய்திகள் ஆப் போன்றவை இருக்கும்.

இதன் ஆரோக்கியம் மற்றும் Wallet ஆகிய ஆப் புதிதாக மாற்றியமைக்கப்படும்.மேலும் முதல் முறையாக App Store ஐ தவிர்த்து வேறு இடங்களில் இருந்து ஆப்பிள் போன்களில் நாம் நமக்கு பிடித்தமான App install செய்யலாம். Watch OS மூலம் இனி புதிய டிஸ்பிளே, புதிய விட்ஜெட் ஆப்ஷன் இடம்பெறும்.