மலை ஏறி மாஸ் காட்டிய பாட்டியின் வைரல் வீடியோ

357
Advertisement

இணைய  உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இன்ஸ்டாகிராமை கலக்கி வருகின்றது. 

இந்த வீடியோ ஒரு 62 வயது மூதாட்டியினுடையது. இவர் தோட்டாவின் வேகத்தில் மலை ஏறுவதை வீடியோவில் காண முடிகின்றது.சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், மலை உச்சியில் ஒரு ஆணும், கீழே பாட்டியும் நிற்பதைக் காண முடிகிறது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே, பாட்டி, கயிற்றின் உதவியுடன் கிடுகிடுவென மலை ஏறுகிறார். பாட்டி மலை ஏறுவதைப் பார்த்தால், அவருக்கு இவ்வளவு வயதானதே தெரியவில்லை. இளைஞர்களுக்கான சுறுசுறுப்புடன் அவர் மலை ஏறுகிறார்.

பெங்களூருவை சேர்ந்த அந்த பாட்டி தனது மகன் மற்றும் அவர்களது நண்பர்களுடன் கேரளாவில் உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரின் உச்சியில் ஏறுவதற்காக வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என தெரியவந்துள்ளது.  பாட்டி ஏறி முடித்த மலை 1868 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது .இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் Timeofkarnataka என்ற பக்கத்தில் பதிவேற்றம் .செய்யப்பட்டதிலிருந்து, வீடியோ படு சூப்பராக இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் பாட்டியை பாராட்டி பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.