ஒரு மாதத்தில் கட்சி அறிவிக்கப்போகும் விஜய்? டெல்லியில் ஸ்பெஷல் டீம் முகாம்

192
Advertisement

ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமா 2009ஆம் ஆண்டு மாறுனப்பவே விஜய் அரசியலுக்கு வரப்போறாருன்னு பரவலான
பேச்சு அடிபட்டுச்சு. அவரது படங்கள் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நடக்குற ஆடியோ லான்ச்ல பேசுற அரசல் புரசலான அரசியல்,
பட்டும் படாமலும் படங்கள்ல பேசுற வசனங்கள்ல வர அரசியல் கருத்துக்கள் இந்த யூகத்துக்கு மேலும் வலு சேக்குற மாதிரி
அமைஞ்சுச்சு.

உள்ளாட்சி தேர்தல்ல விஜய் மக்கள் நிர்வாகிகள் போட்டியிட்டது, மாணவர்கள் பரிசளிப்பு விழா, அடுத்தடுத்த பனையூர் இல்ல
ஆலோசனைகள்னு வேகமான அடுத்த கட்ட நகர்வுகள் விஜய் அரசியல்ல போய்ட்டு இருக்க, தென் மாவட்ட வெள்ளங்கள்
சமயத்துல வெள்ள நிவாரண உதவியும் வழங்கினாரு விஜய். இந்த நிலையில தான் விஜய் கட்சியோட பேரு, சின்னம்
உள்ளிட்டவற்றை பதிவு செய்றதுக்காக இரண்டு ஓய்வுபெற்ற IAS ஆஃபிசர்கள் அடங்கிய குழு டெல்லியில முகாமிட்டு இருக்குறதா
தகவல் வெளியாகி இருக்கு.
இந்த வேலைகளை புஸ்ஸி ஆனந்த் செஞ்சுட்டு வரதாகவும் சொல்றாங்க. ஏற்கனவே, GOAT படம் தான் விஜய்க்கு கடைசின்னு
சொல்லிட்டு வர்ற நிலையில இந்த முன்னெடுப்புகள் விஜய் சீக்கிரமே அரசியலுக்கு வர்றத உறுதிப்படுத்துது. இதுனால, விஜய்
2026ஆம் ஆண்டுல விஜய் நேரடி அரசியலுக்கு வருவாருன்னு கணிக்கப்பட்ட நிலையில 2024ஆம் ஆண்டே நாடாளுமன்ற
தேர்தல்ல போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரிச்சுட்டு வருது.