ரயில்வே மேம்பாலம் பழுதுபார்க்கும் பணிகள் தொடக்கம்

321

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே சந்திப்பு அருகே, கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.

இந்த மேம்பாலம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், மேம்பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இருமுறை  பழுதுபார்க்க முயன்றபோது, தொடர் மழை காரணமாக பணிகள் ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது புதுப்பிக்கும் பணிகளுக்காக ரயில்வே மேம்பாலத்தில் ஒருமாதம் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழியாக செல்லும் வாகனங்கள், மாற்று பாதை மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.