வலிமை திரை விமர்சனம்

301
valimai-update
Advertisement

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, இளவரசு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏகோபித்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் படம் ‘வலிமை’.

போதைப்பொருள், கொலை, கொள்ளை என நகரத்தில் குற்றங்கள் நடக்கின்றன. இந்தக் குற்றங்களின் பின்னணியைக் கண்டுபிடிக்க மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் அஜித். அவருக்கு துணையாக ஹியூமா குரேஸி வருகிறார்.

போதை பொருட்கள் கடத்தலில் பைக் கேங் தலைவன் கார்த்திகேயா ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார் அஜித். இறுதியில் பைக் கேங் கும்பலின் தலைவன் கார்த்திகேயாவை அஜித் கைது செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அஜித் பைக் மட்டுமல்ல பஸ் வரை அவரே ஓட்டிச் சென்று சேஸிங் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார். திரையிலும் ஸ்டைல் லுக், மாஸ் என கிளாப்ஸ் அள்ளுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது உடல் அமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

யுவனின் பின்னணி இசை அருமை. எனினும் பாடல்களில் இன்னமும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

மொத்தத்தில் ‘வலிமை’ வீரமானவன்.