அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் தலையீடு இருக்க கூடாது என்பதற்காக கட்சியின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட முக்கியத் திருத்தம்

500

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை, ஓபிஎஸ்சை ஓரம் கட்டுதல் ஆகிய முக்கிய நகர்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சத்தமில்லாமல் சட்டவிதிகளில் ஒரு திருத்தத்தையும் செய்துமுடித்துள்ளனர்.

அதாவது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் பத்தாண்டுகள் தொடர்ந்து கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.

மேலும் ஐந்தாண்டுகளுக்கு தலைமைக் கழகப் பொறுப்பில் பணியாற்றியிருக்க வேண்டும் என்கிற சட்டத் திருத்தம்தான் அது.

எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் சட்ட நுணுக்கங்களைக் காட்டி, சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ கட்சியில் எந்த உரிமையும் கொண்டாடிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தச் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விதிகளையும் அமல்படுத்தினால் சசிகலா அதிமுகவிற்குள் நுழைய முயற்சிக்கவே முடியாது என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.