வெற்றியை நெருங்கும் பாஜக ..மீண்டும் முதல்வராகிறார் யோகி ஆதித்யநாத்…

378
Advertisement

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் நிலைக்கு வந்துள்ளது . சிட்டிங் முதல்வர் யோகி ஆதித்யாந்த் தொடர்ந்து 2-ம் முறையாக முதல்வர் பதவி ஏற்பார் என்பது உறுதியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் வேலையில் ,முடிவுகள் ஆளும் பாஜக பெரும் வெற்றி பெரும் வகையில் அமைந்துள்ளது . பெரும்பான்மைக்கு தேவையான 203 இடங்களை கடந்து அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளதால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் பதவியில் அமருகிறார் .